உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்
ஹரியானா முதல்வரிடம் மாதர் அமைப்புகள் வலியுறுத்தல்
புதுதில்லி,
அக். 20-ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிராக,
அதிலும் தலித் பெண்களுக்கு எதிராக பல்வேறுவித மான பாலியல் கொடுமைகள்
நடைபெற்று வருகின்றன. இவற்றை செய்திடும் கயவர்கள் மீது உரிய கிரிமினல்
நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட
பல்வேறு மாதர் அமைப் புகள் ஹரியானா முதல்வரிடம் கோரியுள்ளன.ஹரியானா
மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் கொடுமைகள் குறித்தும்,
அதற்கு எதிராக 15ஆம் தேதி நடை பெற்ற பேரணி மற்றும் 17ஆம் தேதி ஹரியானா
முதல்வருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை கள் குறித்தும் அனைத்து மாதர்
அமைப்புக ளின் சார்பில் வியாழனன்று மாலை புதுதில்லி யில் உள்ள பெண்
பத்திரிகையாளர் அணி அலு வலகத்தில் செய்தியாளர்கள் கூட்டம் நடை பெற்றது.
அக்கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுதா
சுந்தரராமனும் பல்வேறு மாதர் அமைப்புகளின் தலைவர்களும் செய்தியாளர்களிடம்
கூறிய தாவது:
“ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் தலித்
பெண்களுக்கு எதிராக மிகவும் கொடூரமானமுறையில் பாலியல் குற்றங்களில்
கயவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கோரி ஹரியானா மாநிலம், ரோஹ்தாக் நகரில் அக்டோபர் 15 அன்று
அனைத்து மாதர் அமைப்புகளின் சார்பிலும் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஹரியானா மாநில அரசு, இவ்வாறு பேரணியாக வரும் பெண்களின் ஜனநாயகக்
குரலுக்குச் செவி மடுக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், இவர்கள் மீது
காவல்துறையினரைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக குண்டாந்தடி, கண்ணீர்ப்புகை
குண்டுகள் வீச்சு என அடக்கு முறையை ஏவிவிட்டது. மனு கொடுக்கச் சென்ற மாதர்
அமைப்பின் தலைவர்களை, மாவட்ட ஆட்சியரும் பார்க்க மறுத்துள்ளார். அதனை
அடுத்து பெண்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்
பின்னரே 17ஆம் தேதியன்று மாதர் அமைப்புகளின் தலைவர்களை ஹரியானா முதல்வர்
சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
பின்னர் பெண்கள் தர்ணாவை முடித்துக்
கொண்டு கலைந்து சென்றனர்.17ஆம் தேதியன்று சண்டிகரில் முதல்வர் அலுவலகத்தில்
முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவையும் சமூகநலத்துறை அமைச்சர் கீதா
புக்கலையும் மாதர் அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்தார்கள்.அவர்களிடம்
‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்த அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு
தண்டிக்காமல் விடப்பட மாட்டார்கள்’ என்ற உறுதிமொழியை முதல்வர் ஹூடா
அளித்தார். பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டு பாதிக்கப்பட்டு
காவல்நிலையத்திற்கு வரும் பெண்கள் தரும் புகார்களை காவல்துறையினர் வாங்க
மறுக்கும் நிகழ்வுகளை மாதர் அமைப் பினர் சுட்டிக்காட்டியபோது, இதுதொடர்பாக
அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் வழி காட்டும் நெறிமுறைகள் உடனடியாக
அனுப்பி வைக்கப்படும் என்ற உறுதிமொழியைத் தந்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான
கொடுமைகள் புரிந் தோருக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரணை செய்து
தீர்ப்பு வழங்கிடும் வகை யில் விரைவு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்க
வேண்டும் என்று மாதர் அமைப் பினர் கோரியபோது, பஞ்சாப் - ஹரியானா
உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அவ்வாறு நீதிமன்றங்கள் திறந்திட
நடவடிக்கை எடுப்ப தாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டப் பஞ்சாயத்துக்கள்
தொடர்பாக மாதர் அமைப்பினர் முறையிட்டபோது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை
எதுவும் எடுக்க முதல்வர் முன்வராததோடு மட்டுமல்லாமல், தட்டிக் கழிக்க
முயற்சித்தார்.முன் அனுமதி பெற்று பேரணியாக வந்த பெண்கள் மீது
காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக குண்டாந்தடியால் எவ் வாறு தாக்கலாம்
என்று மாதர் அமைப்பினர் முதல்வரிடம் கேட்டபோது, முதல்வர் சரியான பதில்
சொல்ல மறுத்துவிட்டார்.
மேலும் அன் றைய தினம் பெண்கள் பலருக்கு
எதிராக காவல்துறையினர் பல்வேறு குற்றப்பிரிவு களின்கீழ் வழக்குகள் பதிவு
செய்திருப்பதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாதர் அமைப்பினர்
வலியுறுத்தியபோது, அதற்கும் சரியானமுறையில் முதல்வர் பதில ளிக்காமல்
மழுப்பிவிட்டார்.இந்நிலையில் பெண்களுக்கு எதிராக ஹரி யானா மாநிலத்தில்
மட்டுமல்ல, மேற்கு வங்கம், கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் குற்றங் கள்
அதிகரித்து வருகிறது. இவற்றிற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த
இருக்கிறோம். இவ்வாறு மாதர் அமைப்பின் தலைவர் கள் கூறினார்கள்.